தமிழில் ஒரு பதிவு

இது தமிழில் என்னுடைய முதல் வலைபதிவு. சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு ஒரு வலைபதிவு செய்கிறேன். சில நாட்களுக்கு முன் “கணையாழியின் கடைசி பக்கங்கள்” படித்து கொண்டிருந்தேன். இப்புத்தகத்தில் நிறைய விஷயங்கள் பற்றி சுஜாதா பேசுகிறார். புதுக்கவிதை, யாப்பிலக்கணம் என்று, நிறைய எனக்கு புரிவது கடினமாக இருந்தது.
அதில் Chinese கவிதை பற்றி சொல்லிகொண்டிருந்தார். கவிதையின் விதி “Chinese கவிதைக்கு நான்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையை தொடங்குகிறது, இரண்டாம் வரி கவிதையை தொடர்கிறது,மூன்றாவது வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் ஒன்று சேர்க்கிறது”. Chinese கவிதையின் உதாரணம்.

கியோடோவைச் சேர்ந்த சில்க் வியாபாரிக்கு இரண்டு பெண்கள்,
மூத்தவளுக்கு இருபது வயது, இளையவள் பதினெட்டு,
ஒரு படைவீரன் கத்தியால் கொள்கிறான்,
ஆனால் இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம் கண்களால் கொல்கிறார்கள்.

இது சுஜாதாவின் Chinese கவிதை.

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்,
மணி பார்த்தன். உட்கார்ந்தான். படுத்து கொண்டான்,
சென்னை விட்டுத் திருச்சி போகும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

இது என்னுடைய முயற்சி

1. கிருஷ்ணன் ஒரு பெண்ணை காதலித்தான்,
அவளும் காதலித்தாள்,
ஒன்பதாம் வகுப்பில் வேற ஒரு பெண்ணையும் காதலித்தான்,
அவள், இவன் இவர்கள் இருவர் மீதும் கொண்டது காதல் அல்ல காமம் என புரிய வைத்தாள்.

2. அன்று மகனும் தாயும், நகமும் சதையும் போல் இருந்தார்கள்,
இன்று தாய் உடம்பு சரியில்லாமல் தனியாய் கஷ்டப்பட, மகன் மனைவியுடன் ஹவாயில் உல்லாசமாய் இருக்க,
தொலைபேசியில் வாழ்த்தினான் “Happy Mother’s day”,
காலமும் உறவும் மாறவில்லை, மனிதர்கள் மாறுகிறார்கள்.

Advertisements

One Response to “தமிழில் ஒரு பதிவு”

  1. LIked the one about mother’s day. Good !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: